1098 பெண் குழந்தைகள் 1098 எண் வடிவில் நின்று உலக சாதனை

முழு விவரம்: 1098 பெண் குழந்தைகள் 1098 எண் வடிவில் நின்று உலக சாதனை

நிகழ்வு தேதி : 2025-01-24

ஜனவரி 24, 2025 அன்று தேசிய பெண்குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சார்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், பெண் கல்வி அவசியம் பற்றிய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 விழிப்புணர்வு குறித்த உலக சாதனை நிகழ்வு சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர் க. சதீஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர், முனைவர் வீ. ப. ஜெயசீலன் இ.ஆ.ப அவர்கள் தலைமையேற்று கொடி அசைத்து உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்தார். "1098 பெண் குழந்தைகள் 1098 எண் வடிவில் நின்று உலக சாதனை" நிகழ்த்தினர்கள். இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர். இந்நிகழ்வில் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமிகு. சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், சிறப்பு விருந்தினார்களாக சார் ஆட்சியர் திருமதி. ந. பிரியா ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு ரா. பாஸ்கர், விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி இல. மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்... மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக சி.இ.நா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு அண்ணாமலையான், JPR பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் திரு. ஜான் பாக்கியராஜ், கலாம் பயிற்சி மைய நிறுவனர் திரு.காளிமுத்து, நித்யா மொபைல்ஸ் உரிமையாளர் திரு. மணி, அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். விழாவின் நிறைவாக பள்ளி தலைமையாசிரியை திருமதி. தனுஜா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவினை, அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் & தலைமை இயக்குனர் க. சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர். செ. சாந்ததீபன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Event Image


நிகழ்வின் புகைப்படங்கள்