குழந்தைத் தொட்டில் திட்டம்

முழு விவரம்: குழந்தைத் தொட்டில் திட்டம்

நிகழ்வு தேதி : 2024-12-27

டிசம்பர் 27, 2024 அன்று, பச்சிளம் குழந்தைகளை குப்பைத்தொட்டி மற்றும் பொதுவெளிகளில் விட்டு செல்வதை தவிர்த்து, பாதுகாக்கும் நோக்கில், குழந்தைத் தொட்டில் திட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சிவகாசி மாநகராட்சி மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார் அவர்கள் நிகழ்விற்கு தலைமை வகித்தார். மேலும், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திருமதி. ஜானகி, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திருமதி. முனியம்மாள், சிவகாசி மாநகராட்சி குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு. சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பொறியாளர் செண்பகமணி, இராஜமுருகன் பேப்பர் ஸ்டோர் திரு. முருகன், நித்யா மொபைல்ஸ் உரிமையாளர் திரு. மணி, JCI சாந்ததீபன் மற்றும் அன்பால் இணைவோம் உறுப்பினர்கள் ஜெகதீஷ், மாரிமுத்து, செல்வகணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை, அன்பால் இணைவோம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தினர்.

Event Image


நிகழ்வின் புகைப்படங்கள்