08.12.2024 அன்று சர்வதேச மனித உரிமைகள் தின விழா - 2024 சிறப்பு நிகழ்ச்சி சிவகாசி ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (நேரு யுவ கேந்திரா - விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியம்) மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை - சிவகாசி இணைந்து நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்க மற்றும் தனித்திறன் போட்டிகள் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதாகும்.
போட்டிகள் கீழ்க்கண்ட இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது:
பிரிவு 1: 1-5 ஆம் வகுப்பு
பிரிவு 2: 6-12 ஆம் வகுப்பு
கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் புகைப்படம் போட்டிகள் நடைபெற்று, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இந்த விழாவில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமிகு. சங்கீதா இன்பம் அவர்கள் தலைமை வகித்து, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முன்னிலை வகித்த முக்கியமான நபர்கள்:
திரு. இராஜாமோகன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் பயிற்சித்துறை அலுவலர், சென்னை தலைமைச் செயலகம்
திரு. ஞானச்சந்திரன், இளைஞர் அலுவலர், விருதுநகர் மாவட்டம்
திரு. நாகராஜன், விருதுநகர் மாவட்ட தலைமை, கமல்ஹாசன் நற்பணி இயக்கம்
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கியவர்கள்:
திருமதி. கிருஷ்ணவேணி, இணைப்பேராசிரியர்
திரு. விஜயநம்பிராஜ், LIC கிளை மேலாளர், சிவகாசி
திரு. பாரதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை
திரு. முருகன், ராஜமுருகன் பேப்பர் ஸ்டோர் உரிமையாளர்
திரு. மணி, நித்யா மொபைல்ஸ் உரிமையாளர்
திரு. சாந்ததீபன், ஜேசிஐ சிவகாசி நிலா தலைவர்
திரு. பவுன்ராஜ், ஜேசிஐ உறுப்பினர்
இவ்விழாவினை, அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் மற்றும் எம். எஸ். பயிற்சி மையம் நிறுவனர் ஜெகதீஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து, இந்த நிகழ்வினை நெஞ்சில் நிற்கும் விதமாக நடத்தினர்.